கனுகஹவெவ மாதிரி கிராமத்தை பாதுகாக்க யானை வேலி
மே 12, 2022கனுகஹவெவ மாதிரி கிராமத்தில் இலங்கை விமானப்படையினரால் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 14 கிலோமீற்றர் நீளமான யானை வேலி மே மாதம் 10 ம் திகதியன்று அம்மக்களுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. அதே சந்தர்ப்பத்தில் அவ்வேலியின் பொறுப்பு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மொரவெவ விமானப்படை நிலையம் இந்த சமூக சேவைத் திட்டத்தை மேற்கொண்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த யானை வேலி அங்கு வசிக்கும் 314 குடும்பங்ககள், அவர்களது சொத்துக்களுக்கும் மற்றும் வயல்களுக்கு அத்துமீறி நுழைந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களை தடுக்க உதவும்.
இந்த யானை வேலி, மனித- யானை மோதலைக் குறைக்கும் அதே வேளையில், உள்ளூர் விவசாய சமூகத்தின் அறுவடைகளுக்கு தொடர்ச்சியான சேதங்கள் ஏற்படுத்துவதை நிறுத்தும். மொரவெவ விமானப்படை நிலையத்தின் துருப்புக்கள் நான்கு மதங்களுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.