மன்னாரில் இராணுவப் படையினர் இரத்ததானம்

மே 14, 2022

மன்னார் வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னார் மாத்தோட்ட ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற இரத்த தான முகாம் ஒன்றின் போது, இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.

54 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் 54 ஆவது படைப் பிரிவு, 541 படைப்பிரிவு, 12 (V) இலங்கை பீரங்கி மற்றும் 10 (V) கெமுனு கண்காணிப்புப் படையினர் பங்களித்தனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Tamil