--> -->

கடற்படை தயாரித்த படகு பயணிகள் சேவைக்காக முன்னெடுப்பு

ஆகஸ்ட் 23, 2019

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட பயணிகள் படகு ஒன்றினை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பிரதமர் கௌரவ. ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார். இந்நிகழ்வு, கொழும்பு லேக் ஹவுஸ் இற்கு முன்னாள் உள்ள மெக்கல்லம் கேட் படகு நங்கூரம் இடும் தளத்தில் நேற்று (ஆகஸ்ட், 22) இடம்பெற்றது. மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட வாவியூடான படகு சேவைக்காக இப்பயணிகள் படகு பயன்படுத்த உள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் தயாரிப்பான வெலிசர கடற்படை படகு நிர்மாணிக்கும் தளத்தில் தயாரிக்கப்பட்ட இப்பயணிகள் படகின்மூலம் ஒருதடவையில் 50 பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ள முடியும். யூனியன் பிளேஸ் படகு நங்கூரமிடும் தளத்திலிருந்து மெக்கல்லம் நங்கூரமிடும் தளம் வரையான பயணிகள் படகு சேவையின் போதான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கை கடற்படை கண்காணிபுக்களை மேற்கொள்ளும். பேரை வாவியூடாக ஆரம்பிக்கப்பட்ட இப் பரீச்சார்த்த படகு போக்குவரத்து சேவையானது கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.