வெல்ல அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்க கடற்படை நிவாரண குழுக்கள் தயார்நிலையில்
மே 15, 2022• மேலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
• மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ விமானப்படை விமானங்கள் தயார் நிலையில்.
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ள நிலையில், வெல்ல அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்குமுகமாக இலங்கை கடற்படையினர் 10 நிவாரண குழுக்களை மேட்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஈடுபடுத்தியுள்ளது.
கடற்படை ஊடக தகவல்களின்படி மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தில் இரத்தினபுரியில் 04 நிவாரண குழுக்களையும் களுத்துறை புலத்சிங்கள மற்றும் பரகொட பகுதிகளில் தலா ஒரு குழுவையும் மற்றும் தெற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தி தவலம மற்றும் நாகொட ஆகிய இடங்களுக்கு தலா 02 குழுக்களையும் வெள்ள நிவாரண பணிகளுக்காக அனுப்பியுள்ளது. இந்த குழுக்களில் ஏற்கனவே சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், கடற்படையினர் மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தில் 18 நிவாரண குழுக்களையும், தெற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தில் 06 நிவாரண குழுக்களையும், வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தில் 18 அனர்த்த நிவாரண குழுக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதற்கிடையில், அடையாளம் காணப்பட்ட 6 மாவட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக விமானம் மற்றும் மீட்பு குழுக்களை இலங்கை விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளது. ரத்மலானை, கட்டுநாயக்க, ஹிங்குராங்கொட மற்றும் அனுராதபுரம் விமானப்படை தளங்களில் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதியில் (மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) நிலவும் மலையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்தின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று அது கூறுகிறது.
வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.