வன்னியில் இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணிப்பு

ஆகஸ்ட் 23, 2019

வன்னி இராணுவத்தினர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெரும் மூன்று குடும்பங்களுக்காக புதிய சுகாதார வசதிகளான மூன்று மலசலகூடங்களை நிர்மானிப்பதற்கான மற்றுமொரு சமூக நலன்புரித் திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன்பிரகாரம் “பௌத்தய” தொலைக்காட்சி அலைவரிசையின் உதவியுடன் குறித்த வசதிகள் நிர்மாணிக்கப்பட்டு புதன்கிழமையன்று (ஆகஸ்ட், 21) சிறு நிகழ்வொன்றின்போது திறந்துவைக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சுகாதார வசதிகளின் நிர்மானப் பணிகள் இலங்கை சிங்கப் படைபிரிவின் 17 ஆவது படைவீரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வசதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில், மஹாசங்க தேரர் லக்செகம விமலரத்ன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சிவிலியன்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.