யாழ்ப்பாணத்தில் விதவை ஒருவருக்கு இலங்கை இராணுவத்தினரால் புதிய வீடு

மே 16, 2022

யாழ்ப்பாணத்தில் விதவை ஒருவருக்காக புதிய வீடொன்ரை நிர்மாணிக்க வேண்டி அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இலங்கை இராணுவத்தின் சமூகநல திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாணம் உடுத்துறையில் பல இன்னல்களுக்கு மத்தியில் வசித்து வந்த ஒரு விதவை மற்றும் அவரது குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55வது பிரிவு நடவடிக்கை எடுத்துததாக இலங்கை இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

திருமதி வி.வசந்த குமாரின் பரிதாப நிலை பற்றி 55ஆவது படைப் பிரிவினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, அவருக்காக வீடொன்றை நிர்மாணிக்கும் பணியை படையினர் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் 55 வது பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன ஆகியோரின் கோரிக்கைகமைய மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் நிதியுதவியுடன் இந்த உத்தேச வீடு நிர்மாணிக்கப்படவுள்ளதாக  மேலும் தெரிவிக்கப்படுகிறது.