நோயாளிகளின் நலனுக்காகப் படை வீரர்கள் இரத்த தானம்

மே 18, 2022

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை இராணுவத் துருப்புக்கள் தங்களின் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம்கள்களை அண்மையில் நடத்தினர்.

இதற்கமைய, 2566வது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரையின் பேரில் இலங்கை கடற்படையின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்படைக் கட்டளை தலைமையகங்களினால் அண்மையில் இரத்ததான முகாம்கள் ஏட்பாடு செய்யப்பட்டன.

கடற்படை தளம் திஸ்ஸவில் பாலர் பாடசாலையில் நடைபெற்ற கிழக்கு கடற்படை கட்டளை தலைமையக மற்றும் கடற்படை தளம் தக்ஷினவில் நடைபெற்ற தெற்கு கடற்படை கட்டளை தலைமையகங்கத்தின் இரத்த இரத்ததான முகாம்கள் `திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் இரத்த இருப்புக்களை நிரப்புவதற்கு பெரிதும் உதவியதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கல்லடி சிவானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற இரத்த தான முகாமின் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர்களுக்காக இரத்த தானம் செய்யப்பட்டதாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி, 23ஆவது படைத் தலைமையகத்தின் துருப்புக்கள் மற்றும் 11ஆவது இலங்கை சிங்ஹ படைப்பிரிவின் துருப்புக்கள், 23ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வின் போது, பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.