கடற்படையினரால் கண்டல் தாவரக் கன்றுகள் நடுகை

மே 22, 2022

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மண்டைதீவு தீவு மற்றும் யாழ்ப்பாணம் பொன்னாலைக் கலப்பின் கரை பகுதிகளில் கண்டல் தாவரக் நடுகை நிகழ்வொன்று வடக்கு கடற்படைத் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மே 20ஆம் திகதி நடைபெற்றது.

 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடலரிப்பை தடுக்கும் கரையோரப் பாதுகாப்பின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன்படி மண்டைதீவு மற்றும் பொன்னாலைக் கலப்பின் கரையோரப் பகுதிகளில் 3800 கண்டல் தாவரக் கன்றுகள் கடற்படையினரினால் நடப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு கடற்படை துணை கட்டளைத் தளபதி, கடற்படை அதிகாரிகள், பிரதேச சமயப் பிரமுகர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.