இராணுவப் படையினர் நல்லதண்ணிற்கு புனித ஆபரணங்களை எடுத்துக் சென்றனர்

மே 23, 2022

இலங்கை இராணுவத்தின் துருப்புக்கள் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளுக்கு இணங்க அண்மையில் நல்லதண்ணிற்கு சமன் தெய்வத்தின் சிலை மற்றும் புனித ஆபரணங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

19 இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரருடன் கலந்தாலோசனையின் பின் இந்நிகழ்வுக்கு உதவியதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி - மத்திய மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 112 ஆவது படைத் தளபதி கேணல் சந்திம குமாரசிங்க மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த ஏற்பாட்டுடன் தொடர்புபட்டனர்.

Tamil