விஹார மகா தேவி பூங்காவில் இராணுவத்தினரால் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது

மே 23, 2022

சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை இராணுவத்தின் மருத்துவக் குழுக்கள், பொதுமக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் நான்காவது கட்ட தடுப்பூசியை விஹார மகா தேவி பூங்காவில் வைத்து வழங்க ஆரம்பித்துள்ளன.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புடன் கொழும்பு நாராஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையளும் மருத்துவ குழுக்கள் தடுப்பூசி திட்டத்தைத் தொடர்வதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Tamil