ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக 100 இராணுவத் துருப்புக்கள் பயணம்

மே 24, 2022

நன்கு பயிற்சி பெற்ற 100 இலங்கை இராணுவ வீரர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று (மே 23) நாட்டிலிருந்து மாலி நாட்டில் (மினுஸ்மா) உள்ள ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) பல் பரிமாண ஒருங்கிணைந்த ஸ்திரப்படுத்தல் பணியில் பணியாற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அக்குழு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் வைத்து சந்தித்தாக இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக கட்டம் கட்டமாக மாலி செல்லவுள்ள இராணுவத்தின் 12 படைப்பிரிவுகளின் 243 துருப்புக்களுக்கு கேர்ணல் சந்தன ஜயமஹா தலைமை வகிப்பார்.

இக்குழு இலங்கை இராணுவத்தின் கெமுனு படைப்பிரிவு, இலங்கை கவசப் படைப்பிரிவு, இலங்கை பொறியாளர்கள் படைப்பிரிவு, இலங்கை சமிக்ஞைப் படைப்பிரிவு , இயந்திரமயமாக்கப்பட்ட காலாட் படைப்பிரிவு, பொறியியலாளர் சேவைகள் படைப்பிரிவு, இலங்கை இராணுவ சேவைப் படைப்பிரிவு, இலங்கை இராணுவ ஆயுதப் படைப்பிரிவு, இலங்கை மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் படைப்பிரிவு, இலங்கை இராணுவப் பொலிஸ் பிரிவு, இலங்கை இராணுவ மருத்துவப் படைப்பிரிவு மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படைப்பிரிவுகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் மூத்த அதிகாரிகளும் சிலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.