வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு இராணுவம் உதவி

மே 24, 2022

புத்தளத்தில் உள்ள இலங்கை இராணுவப் படையினர் இன்று (24) காலை புத்தளம் புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 156 க.பொ.த (சா/த) மாணவர்களை உடனடியாக வெளியேற்றி, அவர்கள் மீண்டும் பரீட்சையை தொடர அப்பாடசாலையில் வேறொரு பாதுகாப்பான இடத்தையும் ஏற்பாடு கொடுக்க நடவடிக்கை துரித எடுத்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பரீட்சை மண்டபத்திலிருந்து கதிரை மேசைகளை அக்கல்லூரியிலுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கு அப்புறப்படுத்தி மாணவர்களுக்கு பரீட்சையை மீண்டும் தொடர 143 படைப்பிரிவு மற்றும் 58 வது பிரிவின் துருப்புக்கள் நடவடிக்கை எடுத்ததாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

அப்பாடசாலையின் அதிபர் மற்றும் பரீட்சை கண்காணிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அரை மணி நேரத்திற்குள் பரீட்சை பணிகள் மீண்டும் தொடங்கியதாகவும் ராணுவம் மேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.