சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மேற்கொண்ட முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு
மே 24, 2022சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்துச் செல்ல முட்பட்ட 67 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (23) மாலை கைது செய்தனர்.
சல்லிசம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் கடற்படையினர் மேட்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இச்சட்டவிரோத குடியேற்ற முயட்சி முறியடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து முதலில் 12 ஆண் சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கலுக்கமைய மேலும் 55 சந்தேக நபர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து அன்று மாலை கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கைகளின் போது இரண்டு முச்சக்கர வண்டிகள், இரண்டு வாகனங்கள் மற்றும் ஒரு உள்நாட்டு பல நாள் மீன்பிடி இழுவை படகும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு பிரதேசங்களை சார்ந்த சந்தேகநபர்கள், அவர்களது உடமைகள் மற்றும் வாகனங்கள் திருகோணமலை போலீசாரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலும், சட்டவிரோத ஆல் கடத்தல்காரர்களின் மோசடியில் சிக்கி, உயிரையும் உடமைகளையும் பணயம் வைத்து ஆபத்தான மற்றும் பயனற்ற கடல் பயணங்களை மேற்கொள்வதை `தவிர்க்குமாறு கடற்படை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.