50 மி மீக்கு அதிகமான மழை மற்றும் கொந்தளிப்புடன் கூடிய கடல் - வானிலை ஆய்வு நிலையம்

மே 24, 2022

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நிலையத்தின் இன்றைய (24) வானிலை அறிக்கைக்கமைய ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை/இரவில் நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமானதாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அவ்வானிலை அறிக்கையில் மேலும்குறிப்பிடப்பட்டுள்ளது.