கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களின் மொழித் திறன் மேம்பாட்டிற்கான ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் உதவி

மே 26, 2022

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) அமெரிக்கா - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு மூலம் ஆங்கிலக் கற்பித்தல் உதவியாளர் ஒருவரின் சேவையை பெற்றுள்ளது.
 
அதன்படி, ஆங்கிலக் கற்பித்தல் உதவியாளர் சியாரா போஸ்ட் பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் ஆங்கில மொழிக் கற்பித்தலுக்கு உதவுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
ஃபுல்பிரைட் ஆணைக்குழு (US-SLFC) வானது ஒரு சுயாதீன அமெரிக்க- இலங்கை ஆணையமாகும், இது பரஸ்பர கல்வி மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு கடந்த சில வருடங்களாக உள்ளூர் தேசிய பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி கற்பிப்பதற்காக கற்பித்தல் உதவியாளர்களை அனுப்பி வருகிறது. இவ் ஆங்கில கற்பித்தல் உதவியாளர்கள் அமெரிக்காவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பிற மொழி பேசுபவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதில் தகுதி பெற்ற இளம் அமெரிக்கர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.