இராணுவத்தின் யுபுன் அபேகோன் புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை படைத்துள்ளார்

மே 28, 2022

இலங்கை இராணுவத்தின் ஸ்டாப் சார்ஜன்ட் யுபுன் அபேகோன் கடந்த வியாழனன்று (26) இடம்பெற்ற ஜேர்மன் பகிரங்க தடகள சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீற்றர் திறந்த போட்டியை 10.06 வினாடிகளில் நிறைவு செய்து புதிய தெற்காசிய சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் படையணியை(SLEME) சேர்ந்த ஸ்டாப் சார்ஜன்ட் அபேகோன் இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டில் 10.15 வினாடிகளில் முந்தைய சாதனையை படைத்திருந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் அனைத்து தெற்காசிய சாதனைகளையும், முறியடித்த அவர், அனைத்து ஆசிய சாதனைகளுக்கும் எதிராக வெற்றி பெற்றதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.