உயிர் நீத்த ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை வீரர்களை
பாதுகாப்பு செயலாளர் நினைவு கூர்ந்தார்

மே 29, 2022

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் வீரர்களின் சர்வதேச தினமான மே 29, இன்று, அமைதிக்கும் சேவையின் போது உயிர்நீத்த 11 இலங்கையர்கள் உட்பட அனைத்து அமைதிகாக்கும் வீரர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.

அகிம்சையானது உலகின் 'மிகப்பெரிய' மற்றும் 'வலிமையான' ஆயுதமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த விசேடமான தினத்தில், ‘கண்ணியம்’ மற்றும் ‘மனிதநேயம்’ ஆகியவற்றைப் பறைசாற்றும் அகிம்சை குறித்த விழிப்புணர்வை உலகின் அனைத்து பகுதிகளுக்கு நாம் பரப்ப வேண்டும்.