யுத்தத்தின் போது மகளிர் படையின் சேவை பாராட்டுக்குரியது - பாதுகாப்பு செயலாளர்

மே 30, 2022
  • இராணுவ மகளிர் படை தேசத்திற்கு ஒரு கெளரவமான சேவையை செய்துள்ளது

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் பெண் படையினர் பல தியாகங்களைச் செய்து நாட்டிற்கு மகத்தான சேவைகளை வழங்கினர்.

"நீங்கள் அனைவரும் உங்கள் கடமைகளை முறையாக செய்ததால், போர் முனையில் உள்ள வீரர்கள் தங்கள் பொறுப்பை முழு திருப்தியுடன் நிறைவேற்ற முடிந்தது". இலங்கை முன்னாள் இராணுவ மகளிர் சங்கத்தின் (SLEAWA) வருடாந்த பொதுக்கூட்டத்தில் நேற்று (மே 29) மாலை களனியில் உள்ள கிலோவர் விடுமுறை விடுதியில் -இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்களின் மகத்தான ஆதரவை நினைவுகூர்ந்த ஜெனரல் குணரத்ன, "காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டபோது, ​​பெண் தாதிகள், பராமரிப்பாளர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்களின் அக்கறையான சேவைகளை நாங்கள் அனுபவித்தோம்" என்று கூறினார். "இதுபோன்ற சிறந்த சேவைகளை நினைவுபடுத்துவதில் நாங்கள் ஒருபோதும் தவறுவதில்லை" என்றும் கூறினார்.

"நீங்கள் அனைவரும் தேசத்திற்கு கெளரவமான சேவையை ஆற்றியுள்ளீர்கள் என்பது உண்மை " என்றும் அவர் என மேலும் குறிப்பிட்டார். இராணுவத்தில் பணிபுரியும் பணிப் பெண்களின் பிள்ளைகள் பட்ட கஷ்டங்களை அவர் நினைவு கூர்ந்தார். இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா மற்றும் பெருந்தொகையான சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.