மாலையுடன் கூடிய காலநிலை தொடரும்
மே 31, 2022- சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கடற்படை நிவாரண குழுக்கள் செயல்நிலையில்
வானிலை ஆய்வு மையம் இன்று (மே 31) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.
இன்று காலை 5.30 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை இன்றும் அடுத்த சில நாட்களுக்கும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதேவேளை, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெல்ல அபாய பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் 06 நிவாரண குழுக்களை நிலைநிறுத்தியுள்ளனர். நான்கு (4) கடற்படைக் குழுக்கள் இரத்தினபுரிக்கும் இரண்டு (2) தவலமவிற்கும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 29 கடற்படை நிவாரணக் குழுக்கள் மேற்கு (03), தெற்கு (8) மற்றும் வடமேற்கு (18) கடற்படை கட்டளை தலைமையக பிராந்தியங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள.