புதிய இராணுவ பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனெரல் சத்தியபிரிய லியனகே நியமனம

ஆகஸ்ட் 24, 2019

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே டப்டப்வீ ஆர் டப்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 54ஆவது பிரதம அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவ கவசப் படையின் மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் இலங்கை தன்னார்வ தொண்டர் படையணியின் கொமடான் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் கட்டளையாக தளபதியாகவும், இலங்கை இராணுவ கவசப் படையணியின் கேர்ணல் கொமடான் ஆகவும் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.