தொடரும் சீரற்ற காலநிலையில் கடற்படை குழுக்கள் வெல்ல நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபாடு
ஜூன் 01, 2022தட்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை பல நிவாரண குழுக்களை ஈடுபடுத்தியது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாயப் பகுதிகளில் தற்பொழுது 13 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிவாரணக் குழுக்கள் குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் தாழ்வுநில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன`. களுத்துறை மாவட்டத்தில் பரகொட, பதுரலிய, புலத்சிங்கள பெலவத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, தெல்கொட, அயகம மற்றும் முவாகம ஆகிய பகுதிகளுக்கு கடற்படை அதன் மேற்கு கடற்படை கட்டளையிலிருந்து நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது.
காலி மாவட்டத்தின் தவலம, ஹினிதும, நாகொட மற்றும் மாபலகம பிரதேசங்களில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மேலும் பல நிவாரணக் குழுக்கள் தெற்கு கடற்படை கட்டளை ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறையின் பரகொட மற்றும் கூடலிகம பிரதேசங்களிலும் காலியின் ஹினிதும பகுதிகளிலும் கடற்படை நிவாரணக் குழுக்களும் க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். மேற்கு (25), தெற்கு (05) மற்றும் வடமேற்கு (10) கடற்படைக் கட்டளைகளில் 40 கடற்படை நிவாரணக் குழுக்கள் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், வானிலை ஆய்வு மையம் இன்று காலை (ஜூன் 01) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.அநுராதபுரம் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.