தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு எச்சரிக்கை

ஜூன் 01, 2022

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வெச்சரிக்கை இன்று (ஜூன் 01) மாலை 4.30 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவான, எலபாத, குருவிட்ட மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கு ‘சிவப்பு’ வண்ண எச்சரிக்கை (நிலை 3) விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, வரகாபொல மற்றும் கேகாலை, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பிடபெத்தர மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, பெல்மடுல்லை, அயகம மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேசங்களுக்கு  ‘செம்மஞ்சள்’ (நிலை 2) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் பின்வருமாறு.