புதிய இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூன் 02, 2022

புதிய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (ஜூன் 02) சந்தித்தார்.

இராணுவ தளபதியை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர், லெப்டினன்ட் ஜெனரல் லியனகே அவர்களின் புதிய நியமனம் தொடர்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

லெப்டினன்ட் ஜெனரல் லியனகே நேற்று (ஜூன் 1) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது இலங்கை இராணுவத்தின் 24 ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.