அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனர்த்த தயார்நிலையை பாதுகாப்பு செயலாளர் மதிப்பாய்வு செய்தார்

ஜூன் 03, 2022

கொழும்பு, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு இன்று (03) விஜயம் மேட்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அதன் பேரிடர் தயார்நிலை மற்றும் முன்கூட்டிய திட்டமிடல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

ஜெனரல் குணரத்ன தனது விஜயத்தின் நிலையத்தின் நிர்வாகம், வளங்கள், நிகழ்ச்சிகள், முறையான பேரிடர் மீட்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டமிடல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊழியர்களுடன் போது பேரிடர் தடுப்பு, தயார்நிலை, பதிலளிப்பு மற்றும் மீட்பு ஆகியவை தொடர்பில் நீண்ட கலந்துரையாட ளை மேட்கொண்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

பாதுகாப்புச் செயலாளரின் விஜயத்தின் போது நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் அதன் சிரேஷ்ட அதிகாரிகள் நிலையத்தை செயல்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளித்தனர்.