தேவையுடைய குடும்பங்களுக்கு உலருணவு விநியோகம்

ஆகஸ்ட் 24, 2019

நாட்டின் தென் பகுதியில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்கள் குழுவினருக்கு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் உலருணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.மத்திய பாதுகாப்பு படை தலைமையாகத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை படைவீரர்களின் ஒத்துழைப்புடன் இப்பிராந்தியத்திலுள்ள நூறு தேவையுடைய குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நன்கொடை அண்மையில் (ஆகஸ்ட், 22) வீரவெல கனிஷ்ட பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது உள்ளூர் நன்கொடையாளி ஒருவரினால் குடும்பங்களுக்கிடையில் விநியோகிக்கப்பட்டது.

இவ் உலருணவு பொதியில் அரிசி, கருவாடு, செத்தல்மிளகாய், பச்சை கடலை, சிக்பீஸ், தேயிலை, தேங்காய், பருப்பு போன்றன அடங்கும்.
இந்நிகழ்வில், 12ஆவது பிரிவு, 122ஆவது படை கட்டளை தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.