இலங்கை விமானப்படை தேசிய உயிர்காக்கும் வெற்றிக்கிண்ண போட்டி 2021/2022 களில் வெற்றி

ஜூன் 06, 2022

இலங்கை விமானப்படை (SLAF) ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சமீபத்தில் நடைபெற்ற 70வது தேசிய உயிர்காக்கும் வெற்றிக்கிண்ண போட்டி - 2021/2022 இல் வெற்றி பெற்றன.

இலங்கை விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய விமானப்படை ஆண்கள் அணி 01 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதுடன், பெண்கள் அணி 08 தங்கம் மற்றும் 08 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று வெற்றிக்கிண்ணங்கலை சுவீகரித்துக்கொண்டன. மேலும், விமானப்படை ஆண்கள் ‘B’அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை உயிர்காக்கும் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 70வது தேசிய உயிர்காக்கும் சம்பியன்ஷிப் போட்டி கடந்த வாரம் (ஜூன் 03&04) ஸ்ரீ ஜெயவர்தனபுர நீச்சல் நீச்சல் தடாகத்தில் கல்கிசையில் உள்ள உயிர்காக்கும் தலைமையக வளாகத்திலும் நடைபெற்றது.