கடலோர காவற்படையினரின் பங்களிப்புடன் ஐந்து நாள் எண்ணெய் கசிவு எதிர்கொள்ளல் பயிட்சி செயலமர்வு ஏட்பாடு

ஜூன் 06, 2022

இலங்கை கடலோர காவற்படையினரின் பங்களிப்புடன் ஏட்பாடு செய்யப்பட்ட ஐந்து நாள் எண்ணெய் கசிவு பதில் பயிற்சி செயலமர்வின் தொடக்க  விழா இன்று (ஜூன் 6) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அமெரிக்காவின் தூதுவர் அதிமேதகு ஜூலி சுங் அவர்கள் பிரதம அதிதியாகவும், இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

கடல்சார் சுற்றுச்சூழல் சவால்களைத் தணிக்க மற்றும் போதுமான எண்ணெய் கசிவு எதிர்கொள்ளல் திறனை மேம்படுத்துவதற்காக அரசு மற்றும் பிற நிறுவனங்களுக்கிடையே நிலையான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த பயிட்சி செயலமர்வின் நோக்கமாகும் என கடலோரக் காவல்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூன் 6 முதல் 10 வரை கொழும்பிளுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளையின் (INDOPACOM) சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியகத்தினால் இந்த செயலமர்வு நடத்தப்படுவதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

அனைத்து உள்நாட்டு அரச துறைசார் நிறுவனங்களின்  பங்குபற்றலுடன் இச்செயலமர்வு நடைபெறுகிறது.

செயலமர்வின் நான்காவது நாள், கடலோரக் காவல்படையின் திறனை காட்சிப்படுத்துமுகமாக திக்கோவிட்டை மீன்பிடி துறைமுகத்தில் உபகரண காட்சி மற்றும் பயிற்சி நடவடிக்கை யொன்றும் நடாத்தப்படும் என கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் ஷான் ஜின் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகளும் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டனர்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், பேரிடர் முகாமைத்துவ நிலையம், வெளிவிவகார அமைச்சு, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கப்பல் செயலகம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், இலங்கை விமானப்படை கடலோர காவற்படை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த செயலமர்வில் கலந்துக்கொள்வதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.