எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கை முப்படையினர் பங்கேட்பு

ஜூன் 08, 2022

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், கடந்த ஞாயிறன்று (ஜூன் 05, 2022) நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கையின் முப்படைகளின் குழுவொன்று பங்கேற்றது.

இவ்வாண்டுடன் (2022) 70 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்து பவள விழா கொண்டாடும் இங்கிலாந்தின் முதல் ஆட்சியாளர் இரண்டாம் எலிசபெத் மஹாராணி அவர். இதனையொட்டி இம்மாதம் 02 முதல் 05 வரை நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில் பல இராணுவ அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கியிருந்தன.

இன்நிகழ்ச்சிகளின் நிறைவில், இலங்கை முப்படைகளின் குழு ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்தனர். இச்சந்திப்பின் போது ஐக்கிய இராச்சியத்தித்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, மஹாராணியாரின் பவள விழா நிகழ்வில் பங்குபற்றியதற்காக இக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

Courtesy - www.srilankahc.uk