கடலோர காவற்படை யினரால் மற்றொரு தொகுதி கடலாமை குஞ்சிகள் கடலில் விடுவிப்பு

ஜூன் 08, 2022

கடலோர காவல்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் பல இடங்களில் அடைகாக்கப்பட்ட 222 முட்டைகளிருந்து பொரித்த நூற்று முப்பத்து நான்கு (134) கடலாமை குஞ்சுகள் சமீபத்தில் கடலில் விடப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த கடலாமை குஞ்சுகள் அவற்றின் இயற்கை சூழலுக்கு விடுவிக்கப்பட்டதை பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கண்டுகளித்தனர்.

 கடலோர காவல்படையானது கடலாமை முட்டைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவற்றின் இயற்கை சூழலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது.

கடலோர காவற்படையினது இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9368 கடலாமை குஞ்சுகளை கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தட்சமயம் 6530 ஆமை முட்டைகளை அடைகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.