இராணுவத்தினருக்கான புதிய தங்குமிட விடுதித் தொகுதி திறந்து வைப்பு

ஜூன் 08, 2022

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் சேவையாற்றும் இராணுவத்தினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட விடுதித் தொகுதியை இன்று (08) திறந்து வைத்தார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட பாதுகாப்பு செயலாளர் புதிய கட்டிடத்தின் பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.

இப் புதிய விடுதி வளாகம், நலன்புரி உணவகம், சேவா வனிதா விற்பனை நிலையம், மருத்துவ பரிசோதனை அறை மற்றும் அனைத்து இதர அத்தியாவசிய வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதுடன் 740 படைவீரர்கள் தங்கும் வசதி கொண்டது.

இராணுவ பொறியியலாளர் சேவைகள் பிரிவு, கடற்படை மற்றும் விமானப்படையினரின் மனிதவள மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியுடன் க்கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

சம்பிரதாய வீடு புகும் மரபுக்களுக்கமைய இந்நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் தலைமை அதிகாரி, இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதி மற்றும் விமானப்படை பிரதிநிதிகள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.