இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு நியமனம்

ஜூன் 08, 2022

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு ஜூன் மாதம் 8ஆம் (2022) திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதம அதிகாரியாக இதுவரை காலம் செயற்பட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தின் 60ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன் இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.