அஹங்கமை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இலங்கை விமானப்படை உதவி

ஜூன் 09, 2022

குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அஹங்கம கொரஹெதிகொட சுனாமி கிராம மக்களுக்காக கொக்கலை விமானப்படை நிலையத்தினால் விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையுடன் அப்பிரதேசத்திற்கான நீர் விநியோக திட்டம் மறுசீரமைக்கப்பட்டு அண்மையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இத்திட்டத்தினால் 35 வறிய குடும்பங்களின் குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்படுவதுடன், சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரனவின் வழிகாட்டுதலின் கீழ் விமானப்படையின் 'குவன் மிதுதம்' நிகழ்ச்சியின் 33 வது கட்டத்தின் கீழ் இத்திட்டத்தின் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்கலை விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி, குரூப் கப்டன் திலின ராஜபக்ஷ, ஹபராதுவ பிரதேச செயலாளர், கோரஹெதிகொட கிராம சேவையாளர், கொக்கல விமானப்படை நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.