மேலும் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலோர காவல்படையால் கடலுக்கு விடுவிப்பு

ஜூன் 14, 2022

இலங்கை கடலோரக் காவல்படையினரால் அண்மையில் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது. கடலோர காவல்படை செய்திகளின் படி, கடலோர காவல்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் (CGTCP) கீழ் பாதுகாக்கப்பட்ட 237 ஆமை முட்டைகள் கொண்ட கூட்டிலிருந்து வெளிவந்த 206 ஆமை குஞ்சுகள் இவ்வாறு கடலில் விடுவிக்கப்பட்டன.

கடலோரக் காவல்படையின் இம்முன்னோடித் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 9574 கடலாமை குஞ்சுகள் கடலில் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 6293 கடலாமை முட்டைகள் கடலோர காவல்படை உயிர்காக்கும் நிலையங்கள் மற்றும் அதன் ஏனைய முகாம்களுக்கருகில் உள்ள குஞ்சு பொரிப்பகங்கள் மற்றும் கூடுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.