கிழக்கில் இலங்கை இராணுவப் படையினர் இரத்ததானம்

ஜூன் 15, 2022

அண்மையில் பொத்துவில் முஹுதுமஹா விகாரையில் நடத்தப்பட்ட இரத்த தானப் முகாமில்  இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.

அம்பாறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் மருத்துவ பணியாளர்கள் குழுவின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 242 ஆவது படையணியின் 2 அதிகாரிகள் மற்றும் 63 இதர அணிகள் உட்பட 65 இராணுவத்தினர் இரத்த தானம் செய்ததாக இலங்கை இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.