16 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பில் சிக்கிய பயணிகள் பேருந்து

ஜூன் 15, 2022

சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (ஜூன் 15, 2006) அரச பேரூந்து ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 64 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அரசுப் பேருந்தை குறிவைத்து இரண்டு கிளைமோர் கண்ணிவெடிகள் வெடித்ததினால் கொல்லப்பட்டவர்களில் 15 குழந்தைகளும் உள்ளடங்கி இருந்தனர். இந்நாள்(ஜூன் 15)  இலங்கையின் வரலாற்றில் ஒரு இருண்ட  நாளாக கருதப்படுவதுடன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உற்பட அப்பாவி பொதுமக்கள் மீது மேட்கொள்ளப்பட்ட இவ்விரக்கமற்ற தாக்குதளை  ஆண்டுதோறும் ஒட்டுமொத்த தேசமும் நினைவு கூர்கிறது.

அன்றைய தினம் 160க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கெபித்திகொல்லே வையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பயணிகள் பேருந்தை இலக்கு வைத்து தல்கஸ்வெவ பிரதேசத்தில் பாதையோரத்தில் புலிகளால்  ஒழித்து வைக்கப்பட்டிருந்த  குண்டு வெடித்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு, பச்சிளம் குழந்தைகளின் உயிரற்ற முகங்களைப் பார்த்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள் பரவின.

இச்செயல் , 2002 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதிலிருந்து அப்பாவி கிராமப்புற சமூகத்திற்கு எதிராக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஒரு கொடூர தாக்குதலாகும்.

விடுதலைப் புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்களே இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக இலங்கை கண்காணிப்பு பணிக்குழுவும் கூறியுள்ளது.

2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி பொலிஸாரின் விசேட பொலிஸ் குழுவினால் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை விடுத்ததின் பின்  2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி, இம்முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால், ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.