இலங்கை கடற்படை கப்பல்கள் பயிற்சி நோக்கில் வெளிநாட்டு துறைமுகங்களுக்கு பயணம்
ஆகஸ்ட் 25, 2019இலங்கை கடற்படையின் 2 கப்பல்கள் கூட்டு பயிற்சி பெறும் நோக்கில் இலங்கை துறைமுகத்தில் இருந்து பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
ஆழ்கடல் ரோந்து கப்பல் எஸ் எல் என் எஸ் சயூரா மற்றும் அதிவேக ஏவுகணை கப்பல் எஸ் எல் என் எஸ் நந்தமித்ரா ஆகிய கப்பல்கள் கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சியில் பங்கேற்கும் வகையில் பங்களாதேஷின் சிட்டாங்கொங் மற்றும் மியன்மாரின் ரங்கூன் ஆகிய துறைமுகங்களுக்கு தமது பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல்கள் இலங்கை திருகோணமலை துறைமுகத்தின் கடற்படை தளத்திலிருந்து (ஆகஸ்ட் ,23 ) புறப்பட்டுச் சென்றுள்ளன.
குறித்த கப்பல்கள் இம்மாதம் 26ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை பங்களாதேசின் துறைமுகத்திலும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நான்காம் திகதி வரை மியன்மாரிலும் தரித்திருக்க திட்டமிட்டுள்ளனர் . அக்கப்பல்களில் உள்ள கடற்படை வீரர்கள் அந்நாட்டு கடற்படை வீரர்களுடன் இணைந்து பல்வேறுபட்ட பயிற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
தமது பயணத்தை நிறைவு செய்து சயூரா மற்றும் நந்த மித்ரா ஆகிய கப்பல்கள் செப்டம்பர் 4ஆம் திகதி ரங்கூன் துறைமுகத்தில் இருந்து நாடு திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.