மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் உறவுகளை வலுப்படுத்தும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்

ஜூன் 18, 2022

ஜெனரல் சேர் ஜான் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் (NDUM) இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டது. இதன்போது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் (HDUCIM) ஆகியவற்றில் கலந்துக்கொள்வது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் பல்கலைக்கழக தூதுக்குழுவினர் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவிற்கு மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்து க்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர், என தெரிவிக்கப்படுகிறது.

கலந்துரையாடலின் போது, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல முன்னாள் துணைவேந்தர்களுக்கு அளிக்கப்பட சிறந்த விருந்தோம்பலுக்கு கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இவ்வாண்டு (2022) செப்டம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உதவி துணைவேந்தர் (சேவைகள், தொழில் உறவுகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள்) டத்தோ டாக்டர். ஜுனைதா பிந்தி கமருடின் மற்றும் அதன் மூத்த அதிகாரிகள் மற்றும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பாதுகாப்பு & நிர்வாகம்) பிரிகேடியர் டபிள்யூ சந்திரசிறி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.