ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க எனும் பெயரில் புதியவீதி திறந்து வைப்பு

ஆகஸ்ட் 25, 2019

ஓய்வு பெற்ற இராணுவ தளபதியானஜெனரல் ஹமில்டன் வன சிங்க அவர்கள் வசித்துவந்த மல்வானை மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான வீதி ‘’ஜெனரல் ஹமில்டன் வன சிங்க மாவத்தை ‘’ என பெயரிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (ஆகஸ்ட், 24) கலந்து சிறப்பித்த போது குறித்த வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளது . ஜெனரல் ஹமில்டன் வனசிங்க அவர்கள் இலங்கை இராணுவத்தின் பதினோராவது இராணுவத் தளபதியாகவும் , கூட்டுப்படை நடவடிக்கைகளுக்கான கட்டளைத் தளபதியாகவும் , பாதுகாப்பு செயலாளராகவும் சேவையாற்றிய மை குறிப்பிடத்தக்கது .

இந்நிகழ்வில் ஜெனரல் ஹமில்டன் வனசிங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் , பிரதேசவாசிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.