கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏட்பாடு

ஜூன் 18, 2022

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைய அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் உள்ளடக்கிய தொடர் இரத்ததானப் முகாம்களை இலங்கை கடற்படை ஜூன் 16 அன்று ஏற்பாடு செய்தது.

அதன்படி, ஏழு கடற்படை கட்டளைகளில் ஒன்பது இரத்த தான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளின் இரத்த வங்கிகளுக்கு மிகவும் தேவையான இரத்த இருப்புக்களை நிரப்புவதே இதன் நோக்கமாகும்.

இந்த மகத்தான முயற்சிகள் அந்தந்த பகுதி கட்டளை தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், பிரதேச இரத்த வங்கிகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டன, என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

2566 வது ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி நிகழ்ச்சிக்கு இணையாக இவ் இரத்தன முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கடற்படை மருத்துவ பிரிவின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இவ் இரத்ததான முகம்களில் அதிகளவான கடற்படை அங்கத்தவர்கள் ஆர்வமுடன் இரத்தம் தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.