பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனாவின் சம்புத்த ராஜ மண்டபம் தேரர்களின் பாவனைக்கு வழங்கிவைப்பு

ஜூன் 19, 2022

பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனாவின் புத்தர் பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ள 'சம்புத்த ராஜ மண்டபம்' பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளின் தலைமையில் பெப்பிலியானவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலய வளாகத்தில் இன்று காலை கையளிக்கப்பட்டது  (ஜூன் 19).

இவ்வரலாற்று சிறப்புமிக்க விகாரையின் பிரதம பீடாதிபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியான பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

அர்ஜுன் (மருத மரம்) மரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இவ்விரண்டு மாடி கட்டிடம் மரச் சிற்பங்களைக் கொண்டுள்ளதுடன் சிறந்த மரச் செதுக்கல் வேலைப்பாடுகளைக் கொண்ட இடமாகவும்  கூறப்படுகிறது.

அஸ்கிரி மகா விகாரையின் மாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கலாநிதி நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதசிறி தேரர் உட்பட வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினர் தலைமையில் இச்சமய திறப்பு விழா நடைபெற்றது.

, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்து, வரலாற்று சிறப்புமிக்க பிரிவேனாவில் தமது சமயக் சமயக் கல்வியைத் தொடர்கின்ற இளம் பிக்குமார்க களின் உபயோகத்திற்காக கணனி ஆய்வகத்ம் ஒன்றும், வணக்கத்திற்குரிய கலாநிதி நியங்கொட விஜிதசிறி தேரரால் பிரதம பீடாதிபதி பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் அவர்களின் அழைப்பின் பேரில் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன புனரமைக்கப்பட்ட பிரிவேனா கட்டிடத் தொகுதியை கையளிப்பதை குறிக்கும்  வகையில் அதன் சாவியை இளம் பிக்கு ஒருவருக்கு அடையாளமாக கையளித்தார்.

மேலும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே புதிதாக அமைக்கப்பட்ட ஞாயிறு அறநெறி பாடசாலையை மாணவர்களின் பாவனைக்காக கையளித்தார்.

பின்னர் பிரதம பீடாதிபதி பேராசிரியர் அபயதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன விளையாட்டு மைதானத்தை கையளித்தார்.

விழாவின் ஆரம்பத்தில் வரவேற்புரையை வணக்கத்திற்குரிய பேராசிரியர் அபயதிஸ்ஸ தேரர் நிகழ்த்தியதுடன், இந்த உன்னத ஆன்மிகப் பணிக்கு பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பௌத்த அலைவரிசையின் தலைவர் வண. பொரலந்தே வஜிரஞான தேரர் மற்றும், கல்கிசை வடரப்பொல பௌத்தயாதனய பிரதம குரு  வண. திவியகஹா யஸஸ்ஸி நாயக்க தேரர் உட்பட வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் சமய அனுஷ்டானங்களும் ஆசீர்வாதங்களும் நடைபெற்றதுடன், தியவடன நிலமே நிலங்க தேல பண்டார மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பக்தர்கள் என பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

புகழ்பெற்ற பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனா, கோட்டை அரசர் ஆறாம் பராக்கிரம பாகுவால் கி.பி 1410 மற்றும் 1415 க்கு இடையில் அவரது அன்பு தாயார் ராணி சுனேத்ரா தேவியின் நினைவாக கட்டப்பட்டது. இவ் அரசன் நாட்டை ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் வீரராவார். 600 வருடங்கள் பழமையான இப்பிரிவேனா, இலங்கையின் மிகப் பெரிய ஆன்மீக மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒன்றாக பௌத்த இலக்கியத் துறையில் விலைமதிப்பற்ற சேவையை ஆற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.