பல மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையின் பிடியில்

ஜூன் 20, 2022

இலங்கை கடற்படையினர் (SLN) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) 543 கிலோ கேரள கஞ்சாவைக் கைப்பற்றினர். உடப்பு பெரியப்பாடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டஇருந்த போது இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை  ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS தம்பபன்னியின் கடற்படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பெரியப்பாடு கடற்கரையில் ரோந்துப் பணியிகளில் ஈடுபட்டிருந்த போது கரையொதிங்கியிருந்த 173 பொதிகளில் மேட்படி கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையினால் கடத்தல்காரர்களால் கஞ்சாவை கரைக்கு கொண்டு வர முடியாமல் கைவிடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் நம்புகின்றனர். மேலும் இந்த கேரளா கஞ்சாவின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 120 மில்லியன் என நம்பப்படுவதாக மேலும் கூறுகிறது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.