பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை தளபதி செயலாளரை சந்திப்பு

ஜூன் 21, 2022

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (ஜூன் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது, பாதுகாப்புச் செயலாளர், மேஜர் ஜெனரல் ரொட்ரிகோ, அவர்களுக்கு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதியாக நியமனம் பெற்றதிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவர் அக்கல்லூரியை மேலும் சிறந்த தரத்திற்கு கொண்டு செல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ரொட்ரிகோ ஆகியோரும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல். நிஷாந்த ஹேரத், அண்மையில் (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்து விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.