ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அளவு மதிப்பீடு நிறுவனத்தின் அங்கீகாரம்

ஜூன் 24, 2022

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  அளவு மதிப்பீடு (சிறப்பு) பட்டம் கற்கைநெறி, இலங்கையின் அளவு மதிப்பீடு நிறுவனத்தின் (IQSSL) நிபந்தனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) தகவல்களுக்கமைய, பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இடஞ்சார்ந்த அறிவியல் பீடத்தின் அளவு கணக்கெடுப்புத் துறையானது, அதன் இளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) பட்டப்படிப்புக்கான  அளவு மதிப்பீடு நிறுவனத்தின் IQSSL அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மேட்கொண்ட முயற்சியின் விளைவாக இவ் அங்கீகாரம் கிடைத்துள்ளது என மேலும் கூறப்படுகிறது.

எதிர்காலத்தில், அளவு மதிப்பீடு பட்டப்படிப்பு பட்டதாரிகளுக்கு  இவ் அங்கீகாரம்   மேலதிக  பயனை பெற்றுக்கொள்ள உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.