கடலோர காவல்படைக்கு ஆஸ்திரேலிய எல்லைப் படை தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு

ஜூன் 27, 2022

இலங்கை கடலோர காவல்படைக்கு ஒரு தொகை  தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் கிடைக்கப்  பெற்றுள்ளன . இது கடலோரக் காவல்படையின் எதிர்கால பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இலங்கை கடலோர காவல்படை தகவல்களுக்கமைய, அவுஸ்திரேலிய எல்லைப் படையின் (ABF), முதல் செயலாளர் பரிசோதகர் பிரட் ஸேந்தர் தலைமையிலான குழுவினர், கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவிடம், வெள்ளவத்தையில் உள்ள கடலோர காவல்படை உப தலைமையகத்தில் வைத்து அண்மையில் இவ் உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

இவ் உபகரணங்கள் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

 அவுஸ்திரேலிய எல்லைப் படையின் சர்வதேச செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி பரிசோதகர் வனேசா பெல் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில்   கலந்துக் கொண்டனர்.