கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இராணுவப் படையினர் இரத்த தானம்

ஜூன் 27, 2022

நோயாளிகளின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கமாக கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இலங்கை  இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.

 கிளிநொச்சியில் மாஸ் இன்டிமேட்ஸ் நிறுவனத்தினரால் (MAS Intimates) ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இரத்தான நிகழ்ச்சியின் போது 65 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்த தானம் செய்ய முன்வந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.