இலங்கை விமானப்படை யுத்த வீரர்கள் நினைவு கூறல் நிகழ்ச்சி

ஜூன் 27, 2022

இலங்கை விமானப்படை தனது யுத்த வீரர்களை நினைவு கூறி “போர்வீரர்கள் நினைவேந்தல் விழா 2022” நிகழ்வை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அனுசரணையின் கீழ் ஏக்கலையிலுள்ள அதன் பயிற்சி பாசறையில் விமானப்படை போர் வீரர் நினைவகத்தில் அண்மையில் நடாத்தியது.

இந்த நிகழ்ச்சியின் போது, விமானப்படை யுத்த வீரர்களின் உயர்ந்த தியாகத்தை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகளும் ஏனைய தர படையினரும் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.