மிருசுவிலில் குழந்தைக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் இராணுவத்தினரால் விநியோகம்

ஜூன் 28, 2022

நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஊக்குவிக்கும் நோக்குடன் அண்மையில் மிருசுவிலில் ஐம்பது கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கான  அத்தியாவசியப் பொருட்களை இராணுவத்தினர் அன்பளிப்பாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சி யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின்  (SFHQ-J) 52 ஆவது பிரிவின் கீழ் உள்ள 521 படைப்பிரிவின் தலைமையகத்தின்  11 விஜயபாகு காலாட்படை படைப்பிரிவுப் படையினரின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் கனடாவில் வசிக்கும் திரு.  ரஜிகரன் சண்முகரத்தினம் இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியுள்ளார்.

வடமராட்சி வடக்கு மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர், பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.