யாழ் மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வாய்ப்பு

ஜூன் 29, 2022

இலங்கை இராணுவம் (SLA) யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள குறைந்த வருமானமுடைய பாடசாலை மாணவர்களுக்கு 22 துவிச்சக்கர வண்டிகளையும், 50 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைக்கும் நிகழ்வொன்றை அண்மையில் சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் நடத்தியது. கனடாவில் வதியும்  திரு.ரஜிகரன் சண்முகரத்தினம் அவர்கள் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகம் (SFHQ-J) அதன்  தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தரவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, பிராந்தியத்தில் சிவில் இராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், திரு.ரஜிகரன் சண்முகரத்தினம், பிரதேச மக்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.