கிழக்கு மாகாணத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்களுக்கு இலங்கை கடற்படை உதவி
ஜூலை 04, 2022திருகோணமலை பிரதேச பாடசாலை மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட இரண்டு நாள் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு இலங்கை கடற்படை உதவியளித்தது.
திருகோணமலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அலுவலகம், கிழக்கு கடற்படை கட்டளை தளத்தின் சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து அண்மையில் (ஜூன் 27 மற்றும் 28) திருகோணமலை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் போது, இந்துக் கல்லூரியின் 186 மாணவர்கள் மற்றும் திருகோணமலை ராஜகீய வித்யாலோக தேசிய பாடசாலையின் 66 மாணவர்கள் உட்பட மொத்தம் 252 பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டது.
கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்ச்சி மேட்கொள்ளப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இச் சமூக சேவை செயட்பாடு மேட்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது