இராணுவத்தினர் இரத்த தானம் செய்தனர்

ஜூலை 07, 2022

மத்திய இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இராணுவ (SLA) துருப்புகள் அண்மையில் கொழும்பு விசாக்கா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 142 மற்றும் 144 படைப்பிரிவுகளைச் சேர்ந்த துருப்புக்கள் பாடசாலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்ய முன்வந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

40 அதிகாரிகளையும்  ஏனைய தர துருப்பினரையும் கொண்ட ஒரு குழு மத்திய இரத்த வங்கியின் தேவையை நிவர்த்தி செய்யுமுகமாக இரத்த  தானம் செய்தது.

மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியதாக, இராணுவம் மேலும் கூறியது.